business

img

பெட்ரோல் விலை உயர்வு பின்னணியில் சதி உள்ளது.... தர்மேந்திர பிரதான் மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.... பீகார் சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் வழக்கு....

பாட்னா:
இந்தியாவில், காஷ்மீர், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, தமிழ்நாடு என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிக் கொண் டிருக்கிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மிபெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக முசாபர்பூரில் உள்ள தலைமை நீதித்துறைநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.“சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைவாக உள்ள போதிலும்,நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இதன் பின்னணியில் சதி நடக்கிறது. பெட்ரோல் - டீசல்விலை உயர்வு நாட்டு மக்களை பயமுறுத்துகிறது மற்றும் அவர்களைக் கோபமடைய செய்கிறது” என்று தமன்னா ஹாஸ்மி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

2014-இல் கச்சா எண்ணெய் 101 டாலராகஇருந்தபோது பெட்ரோல் விலை 61 ரூபாய்தான். ஆனால், 2021-இல் கச்சா எண்ணெய்வெறும் 76 டாலருக்கு கிடைக்கும்போது, இந்தியாவில் பெட்ரோல் விலை 108 ரூபாய்வரை விற்கப்படுகிறது. இதனை முன்வைத்தே ஹாஸ்மி வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில், இந்தியதண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள்420 (மோசடி), 295 மற்றும் 295ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 511 (குற்றம் செய்ய முயற்சித்தல்)ஆகிய பிரிவுகளின் கீழ் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்ஹாஸ்மி வலியுறுத்தியுள்ளார்.தமன்னா ஹாஸ்மி ஏற்கெனவே பலபிரச்சனைகள் தொடர்பாக முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆவார். இதற்கு முன்னதாக பதஞ்சலி விளம்பரங்கள் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறிகார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் மீதும்தமன்னா ஹாஸ்மி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;